புதன், 16 ஆகஸ்ட், 2023

கொளப்பலூர் புத்தகத் திருவிழா - 2023

  மரியாதைக்குரியவர்களே,  

வணக்கம்.  வருகின்ற 2023 அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய இருநாட்கள் நம்ம கொளப்பலூரில் நூலக  வாசகர் வட்டம் பொதுமக்கள் இணைந்து கொளப்பலூர்  புத்தகத் திருவிழா நடத்தலாம்  என திட்டமிடப்பட்டுள்ளது. திரு.பார்த்திபன் அவர்களை நேரில் சந்தித்து விவாதிக்க வேண்டும். பிறகு ஊர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச வேண்டும். கொளப்பலூர் வாசகர் வட்டம் உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். முயற்சிப்போம்.

வெள்ளி, 31 ஜனவரி, 2020

kolappalur - ஆழ்ந்த இரங்கல்

கொளப்பலூர்
 திரு. கதிர்வேல் மற்றும் பொன்னுசுவாமி அவர்களின் தாயார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.




வெள்ளி, 29 மார்ச், 2013

consumer welfare and Road safety organisation - Tamil nadu - 2013

 மரியாதைக்குரிய நண்பர்களே,
                                  வணக்கம்.
 நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம் -தமிழ்நாடு என்ற பெயரில் கடந்த 15-03-2013 ந் தேதியன்று சத்தியமங்கலத்தில் மாநில அளவில் சமூக நல இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் 

       consumerandroad.blogspot.in 

         என்ற வலைப்பக்கத்தில் காணலாம். 
      மின்னஞ்சல் முகவரி

         consumerandroad@gmail.com 

        என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 
                       நன்றிங்க! என 
                   மாநிலப் பொதுச் செயலாளர்
             c.parameswaran - Thalavady -Erode Dt.

சனி, 16 மார்ச், 2013

சத்தியமங்கலத்தில்உலக நுகர்வோர் தினவிழா-15-03-2013-15-03-2013




    
   மரியாதைக்குரிய நண்பர்களே,
                               வணக்கம். 15-03-2013 இன்று
     உலக முக்கிய தினங்களில் ஒன்றான ''உலக நுகர்வோர் தினவிழா'' ஆகும்.இன்றைய தினத்தில் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலத்தில் சமூக நலனுக்கான பொதுச் சேவை அமைப்பு  இனிய உதயமாகி உள்ளது.அது பற்றிய விவரம் காண்க.






 
                சத்தியில் முப்பெரும் விழா.
     சத்தியமங்கலத்தில்15-03-2013 அன்று உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தேசிய தினவிழா மற்றும் சமூக சேவைக்கான புதிய அமைப்பு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
     சத்தியமங்கலம் லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் ‘’நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு’’ என்ற பெயரில் புதிய சமூக சேவை அமைப்பு உருவாக்கப்பட்டது.
    விழாவிற்கு 
            திரு.A.A. இராமசாமி அவர்கள் தலைமை வகித்தார்.       
           திரு,K. லோகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
           திரு. V.ராஜன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். 
           திரு. C. பரமேஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 
           திரு.V. பாலமுருகன்-தாளவாடி அவர்கள் நன்றி கூறினார்.
   நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம் – தமிழ்நாடு என்ற புதிய சமூக சேவை அமைப்பிற்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
     இந்த இயக்கம் ‘வாழு வாழ விடு’ என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி பொதுநலனுக்காக செயல்படும்.
 மேலும்,பொது மக்களுக்கு
      (1) நுகர்வோர் கல்வி கொடுப்பதற்காக, சட்ட விழிப்புணர்வு கொடுப்பது, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு , பயிலரங்கம் நடத்துவது.
      (2) சாலைப்பாதுகாப்புக் கல்வி கொடுப்பதற்காக,ஓட்டுநர் தினவிழா,பயணிகள் தினவிழா,பாதசாரிகள் தினவிழா,நடத்துவது.முதலுதவிப் பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை& சிகிச்சை முகாம்.மற்றும் மன அழுத்தம் போக்க யோகா வகுப்புகள் ஆகியன இலவசமாக நடத்துவது.
    (3)இளைய சமுதாய நலனுக்காக கலாச்சாரச் சீர்கேடு,மது போதையின் தீமைகள்,மற்றும் நமது பண்பாடும் குடும்ப உறவும் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துவது.
    (4) மலைப்பகுதி மக்களுக்காக சமூக முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு,உயர் கல்விக்கான விழிப்புணர்வு கொடுப்பது..
  (5) மக்கள் நலனுக்காக நடத்தப்படும் அரசுத்துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளிலும்,அரசு சாரா சமூக சேவை அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் இணைந்து செயல்படுவது.
        போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  விழா ஏற்பாட்டினை திரு. S.ரவி கடம்பூர் மலை, மற்றும் தனபால் – தனம் மொபைல் ஆட்டோ சத்தி ஆகியோர் செய்து இருந்தனர்.
          நிர்வாகிகள் பட்டியல் விவரம் காண்க.
            ++++++++++++++++++++++++++++
  நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம்.-
                     தமிழ்நாடு.
   
     DATE;- 15-03-2013 FRI DAY. 05-00P.M.
       
         நிர்வாகிகள் பட்டியல் விவரம்;-
தலைவர்- திரு.A.A. இராமசாமி அவர்கள்,
             ஸ்ரீகணபதி அரிசி மண்டி -சத்தியமங்கலம்.
துணைத் தலைவர்- திரு.S. ரவி அவர்கள்,
                    கடம்பூர் மலை.
செயலாளர் – திரு. C.பரமேஸ்வரன் அவர்கள் -சத்தியமங்கலம்.
துணைச் செயலாளர் – திரு.V. ராஜன் அவர்கள் -காசிபாளையம்.(கோபி)
பொருளாளர் – திரு. V.பாலமுருகன் அவர்கள்,
                 முத்திரைத்தாள் விற்பனையாளர் -தாளவாடி.
ஒருங்கிணைப்பாளர் – திரு.K. லோகநாதன் அவர்கள்,
                    லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி,
                     209 தேசிய நெடுஞ்சாலை- சத்தியமங்கலம்.
தகவல் தொடர்பு ஆலோசகர் – திரு. வேலுச்சாமி அவர்கள்,
                          செய்தியாளர்- சத்தியமங்கலம்.
செயற்குழு உறுப்பினர்கள்.
திரு. தனபால் அவர்கள்,
        தனம் மொபைல் ஆட்டோ.- சத்தியமங்கலம்.
திரு. A.P.ராஜூ அவர்கள், தாளவாடி
திரு.A.D. பிரபு காந்த் அவர்கள்,
     ஸ்ரீவாசவி தங்க மாளிகை- சத்தியமங்கலம்.
திரு. K.A.B.சதீஷ்குமார் அவர்கள்,
     கிருஷ்ணா கல்யாண் ஸ்டோர்ஸ்-,சத்தியமங்கலம்.
திரு.மனோஜ் பாண்டியன் அவர்கள்,
            செய்தியாளர் -சத்தியமங்கலம்.
திரு. சிவக்குமார் அவர்கள்,
      செய்தியாளர் -சத்தியமங்கலம்.
திரு. S.பரமேஸ்வரன் அவர்கள்,
       எல்.ஐ.சி.முகவர்,- கோபி செட்டிபாளையம்.
                       பதிவேற்றம்;- 
          திரு. C.பரமேஸ்வரன் அவர்கள், செயலாளர்- 
       நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-
                       தமிழ்நாடு.

02 பிப்ரவரி 2013

சாலைப்பாதுகாப்பு-பட்டறிவும்! கேட்டறிவும்

மரியாதைக்குரிய நண்பர்களே,
                        வணக்கம். 
                  சாலைபாதுகாப்பு வாரவிழா கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை விளம்பரத்திற்காக என்றில்லாமல் விழிப்புணர்வுக்காக என்ற சமூக நலன் நோக்கத்தோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி,வட்டார போக்குவரத்து பகுதிநேர அலுவலகம் சத்தியமங்கலம்,ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் சத்தியமங்கலம்,காவல் துறை தாளவாடி,அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடி, காவல்துறை ஆசனூர்,மதுவிலக்கு அமல் பிரிவு ஆசனூர்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை ஆசனூர்,வனத்துறை ஆசனூர்,ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி,ஒய்ஸ்மென் கிளப் ஆப் தாளவாடி,மனித உரிமைகள் கழகம் தாளவாடி,பாம்2 என்.ஜி.ஓ. தாளவாடி,ஜெ.எஸ்.எஸ்.தொழிற்பயிற்சி நிலையம் தாளவாடி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தாளவாடி,டிவைன் மெட்ரிக் பள்ளி தாளவாடி,புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி தாளவாடி,மற்றும் மக்கள் பிரதிநிதிகள்,பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகம் தாளவாடி,அனைத்து தனியார் மற்றும் அரசு ஓட்டுனர்கள்,கனரக வாகன ஓட்டுனர்கள் தாளவாடி,சமூக தன்னார்வலர்கள்,ஆகிய அனைவரையும் இணைத்து கருத்தரங்கம்,விவாத மேடை,கருத்துக்கள் தொகுப்பு என சேகரித்து அதனடிப்படையில் நான் சாலைப்பாதுகாப்பு பற்றிய புத்தகம் ஒன்று எழுதி வருகிறேன்.கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் உள்ளது. அதில் சாலைகளின் வகைகள்,பாகங்கள்,தன்மைகள், வாகனங்களின் பாகங்கள்,தன்மைகள்,பிரிவுகள், வாகனம் ஓட்டுனர்கள்தொழில் செய்பவர்கள்,சொந்த தேவைக்காக ஓட்டுபவர்கள் பற்றிய விபரங்கள்,வாகனம் ஓட்டும் முறைகள்,சாலை விதிகள்,போக்குவரத்துசின்னங்கள்,சைகைகள்,சட்டங்களும்,குற்றங்களும்,
  தண்டனைகளும்,முதலுதவி சிகிச்சை பற்றிய விபரங்கள்,மன அழுத்தங்களைப்போக்க யோகா,தியானம்,மூச்சுப்பயிற்சி,மற்றும் உடல் நலக்குறிப்புகள்,உணவு கொள்ளும் முறைகள் என நூறு பக்கங்களுக்கும் அதிகமாக கொண்ட புத்தகம் வெளியிட உள்ளேன்.கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறேன்.விரைவில் மீண்டும் சந்திக்கும்வரை நன்றி கூறி விடை பெறுவது 
      அன்பன்- PARAMES DRIVER

புதன், 2 மே, 2012

கோழிக்கூண்டு-02 தொடர்ச்சி


        அன்பு நண்பர்களே,வணக்கம். 
         கொளப்பலூர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.




























































கோழி கூண்டு அமைப்பு-




அன்பு நண்பர்களே,வணக்கம். 
        கொளப்பலூர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.இங்கு கோழிகளுக்கு கூண்டு (வீடு) அமைப்பது பற்றி காண்போம்.
(1)

   
(2) வது







(3)வது



(4)வது







(5)வது






(6)வது







(7)






(8)வது







மனச்சோர்வு இல்லாத வாழ்வுக்கு...

                 






மனச்சோர்வு இல்லாத வாழ்வுக்கு...


இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் ஒவ்வொரு வினாடித் துளிகளும் நமக்கென்றே பரிசளிக்கப்பட்ட மிக அழகான தருணங்கள். ஒவ்வொரு தருணத்திலும் பல்வேறு அனுபவங்கள், அதற்குள் பொதிக்கப்பட்ட சின்ன சின்னச் சந்தோஷங்கள் என வியாபித்திருக்கின்றன. அவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரமும் நம் கையில் இருக்கிறது.

ஆனால், நாமோ நம்முடைய அன்றாடத் தேவைகளுக்காக ஓட ஆரம்பித்து, நமது எதிர்காலம், நமது வருங்கால சந்ததியினரின் தேவைகள் என ஓடிக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது. சிலர் குறித்த இலக்கை அடைகின்றார்கள். சிலர் அடைவதில்லை. பலருக்கு அடைந்தும் திருப்தியில்லை. உண்மையில் வெற்றியோ மன அமைதியோ, எதனையும் அடையக் கூடிய சக்தி நம்முள்ளேதான் உள்ளது.

நம் உண்மையான வழிகாட்டியான ஆழ்மனதை எளிய சுயமனோவசிய பயிற்சிக்குப் பழக்கி நாம் விரும்பும் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வரலாம். தியானத்தின் போது இருக்கும் மனநிலை தான் ஆழ்மன சுயமனோவசியப் பயிற்சியின் மனநிலையும்.

பயிற்சிக்கான எளிய வழிகள்:
* முதலில் ஒரு அமைதியான இடத்தில் சற்று வசதியாக அமர்ந்துகொள்ளவும்.

* பிறகு கண்களை மூடி, மூச்சை நன்றாக உள் இழுத்து சில வினாடிகள் வைத்திருந்து, பின் வெளியே விடவும், இதே போன்று மூன்று முறை செய்யவும்.

* பிறகு, தலையிலிருந்து பாதம் வரை மெதுவாக கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் ஒவ்வொரு தசையும் ஓய்வாக உணரும்படியாக, ‘ரிலாக்ஸ்’ என்ற ரம்மியமான கட்டளையுடன், உச்சந்தலையில் ஆரம்பித்து முன் மண்டை, முகம், கழுத்து என அடி வரை அவசரமில்லாமல் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும். நமது உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ரிலாக்ஸ் ஆவதை கண்களுக்குள் காட்சியாகவும் உருவகம் செய்யலாம்.

* பயிற்சியின் போது வெளியிலிருந்து எண்ண அலைகள் தாக்காமல் இருக்க, நம்மைச் சுற்றி ஒரு வெள்ளை ஒளி சூழ்ந்து பாதுகாப்பதாக கற்பனை செய்து கொள்ளவும்.

* உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ஓய்வாக உணர்ந்து, ஒரு பாதுகாப்பு கவசத்தையும் உருவாக்கிய பிறகு, பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே மேலிருந்து கீழ் நோக்கி, மாடிப்படி வழியாகவோ அல்லது எலிவேட்டர் மூலமாகவோ இறங்குவதாக கற்பனை செய்யவும். ஒவ்வொரு எண்ணை எண்ணும்போதும் இன்னம் ஆழமாக, இன்னும் ஆழமாக என்று கூறிக்கொண்டே இறங்கவும். (கவனம் சிறிது பிசகுவது போல உணர்ந்தால், பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக்கொண்டே இறங்குவதை இரண்டு முறை செய்யலாம்.)

* இப்பொழுது நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மிக அழகான, மிக இனிமையான ஒரு இடத்திற்கு வந்துவிட்டதை உணருங்கள். அந்த இடம் உங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்த இடமாகவோ அல்லது உங்கள் விடுமுறை நாட்களில் செல்லும் இடமாகவோ அல்லது ஒரு கற்பனை இடமாகவோ கூட இருக்கலாம். மெதுவாக உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் பாருங்கள். மிருதுவாக அவற்றை தொட்டுப் பாருங்கள். சுற்றிக் கேட்கும் இனிமையான ஒலி, ஒருவிதமான நறுமணம் ஆகியவற்றை உணருங்கள். இந்த அனுபவம் மனக் கண் முன் தெளிவான உயிரோட்டமுள்ள காட்சியாகட்டும்.

* இப்பொழுது, உங்கள் குறிக்கோளைக் கற்பனை செய்யத் தொடங்கலாம். அந்தக் குறிக்கோள் கற்பனையில் காட்சியாகவோ, செயலாகவோ அல்லது வார்த்தை வடிவாகவோ இருக்கலாம். குறிக்கோள் கற்பனை பலமுறை செய்யவும்.

* பிறகு அந்த குறிக்கோள் முழுமை அடைவதைபல நிலைகளாக்கி, ஒவ்வொரு நிலைக்கும் சென்று, அந்த ஒவ்வொரு நிலை வெற்றி தரும் அனைத்து உணர்வுகளையும், அமைதியாக முழுமையாக அனுபவிக்கவும்.

* இதில் மிக முக்கியமானது, பயிற்சி பலன் கொடுக்க, நாம் உபயோகிக்கும் அனைத்து வார்த்தைகளும் நேர்மறையானவையாக இருக்க வேண்டும்.

* பயிற்சி முடிந்தவுடன், ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக் கொண்டே, மிக உற்சாகமாக, சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறிக்கொண்டே கண்களை மெதுவாகத் திறக்கவும்.

நம்மில் பலருக்கு அலாரம் அடிக்கும் முன்னே அல்லது அடித்து முடிக்கும் முன் எழும் பழக்கம் இருக்கக்கூடும். அதேபோல் பயிற்சி ஆரம்பிக்கும் போது நம் மனத்திற்குள் குறிப்பிட்ட நிமிடப் பயிற்சி என்று சொல்லி விட்டால் போதும்.


பயிற்சியில் பதிவு செய்ய சில எடுத்துக்காட்டுகள்:
* நான் எப்பொழுதும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் இருப்பேன்

* இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது-

* என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி சரியான முறையில் வேலை செய்து என்னை ஆரோக்கியமாக வைக்கும்.

* நான் என்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்வேன்.

* எனக்கு உடற் பயிற்சி செய்வது மிகவும் பிடிக்கும்.

* நான் என் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவேன்.

பதிவு செய்யும் தகவல்களை விருப்பம்போல் அமைத்துக் கொள்ளலாம். அதேபோல், ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு விஷயம் என ஆரம்பித்து, பின் நாட்களைக் குறைத்தோ அல்லது கூட்டியோ கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சி தனியான அமைதியான இடத்தில் செய்ய ஆரம்பித்து, பின் இதை நாம் பயணம் செய்யும்போது கிடைக்கும் நேரத்திலோ, வேலையின் இடையில் கிடைக்கும் சில நிமிடங்களிலோ கூட செய்யலாம். சில நிமிடங்கள் கண்ணை மூடிச் செய்யும் பயிற்சி பொதுவாக மற்றவர்கள் பார்வையிலும் கவனிப்புக்குரியதாகாது.

சம தரையில் படுத்துக்கொண்டு, கண்களை மூடி உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் கவனம் செலுத்துதல் மற்றும் அதை அன்பாக நேசிப்பதாக உணர்வது என்பது போன்ற சுயமனோவசிய பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருப்பதால் பல யோகா மையங்களில் இப்பொழுது இது பயிற்றுவிக்கப்படுகிறது-

இந்த எளிய பயிற்சி மூலம் மிகப் பெரிய வெற்றி அடையலாம் முயற்சி செய்யுங்கள்.